Home One Line P1 புதிய அமைச்சரவை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும்!

புதிய அமைச்சரவை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும்!

602
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் புதிய அமைச்சரவையின் பெயர் பட்டியலை இன்று காலை 11 மணிக்கு மாமன்னரின் பார்வைக்கு கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், மாமன்னரிடம் ஒப்புதல் பெற்ற பிறகு, பிரதமர் புதிய அமைச்சரவை வரிசையை இன்று மாலை 5 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

72 வயதான மொகிதின் மார்ச் 1-ஆம் தேதி இஸ்தானா நெகாராவில் மாமான்னர் சுல்தான் அப்துல்லாவு முன்னிலையில் 8-வது பிரதமராக பதவியேற்றார்.

#TamilSchoolmychoice

மத்திய அரசியலமைப்பின் 40 (2) (அ) மற்றும் 43 (2) (அ) பிரிவுகளின்படி மாமன்னர் மொகிதினை பிரதமராக நியமித்தார்.