Home One Line P1 துன் மகாதீரை சந்திக்க மொகிதின் கடிதம்!

துன் மகாதீரை சந்திக்க மொகிதின் கடிதம்!

569
0
SHARE
Ad

கோலாலம்பூர்: துன் டாக்டர் மகாதீருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மொகிதின் யாசின் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெர்சாத்து உச்சமட்டக் குழு உறுப்பினர் வான் சைபுல் வான் ஜான் கூறுகையில், பெர்சாத்துவின் தலைவராக இருக்கும் மொகிதின் இந்த விஷயத்தைப் பற்றி வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தில் கூறினார் என்று தெரிவித்தார்.

” டாக்டர் மகாதீருடன் தாம் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய முயற்சித்ததாக மொகிதின் யாசின் கூறினார்.”

#TamilSchoolmychoice

“அவர் டாக்டர் மகாதீருக்கு சந்திக்கக் கோரி ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ளார். நாங்கள் டாக்டர் மகாதீரிடமிருந்து தேதிக்காக மட்டுமே காத்திருக்கிறோம்.” என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், வான் சைபுல் பெர்சாத்துவின் உறுப்பினர்களை சமாதானமாகச் செல்ல அழைப்பு விடுத்துள்ளார்.

“எங்கள் உயர்மட்ட தலைவர்களை சமாதானமாகக் கொண்டு வந்து ஒன்று சேருமாறு வற்புறுத்துகிறோம், வற்புறுத்துவோம். டாக்டர் மகாதீர், மொகிதின் மற்றும் முகிரிஸ் மகாதீர் ஆகிய மூன்று முக்கிய நபர்களின் பலத்தின் அடிப்படையில் எங்கள் கட்சி கட்டப்பட்டுள்ளது.”