Home One Line P1 அரசியல் ஆட்டம் ஒருபுறம் – இருந்தாலும் சைக்கிள் ஓட்டம் மறக்காத மகாதீர்

அரசியல் ஆட்டம் ஒருபுறம் – இருந்தாலும் சைக்கிள் ஓட்டம் மறக்காத மகாதீர்

565
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – கடந்த இரண்டு வாரங்களாக பரபரத்துக் கிடக்கும் மலேசிய அரசியல் அரங்கில் முக்கியக் கதாநாயகனாக வலம் வரும் துன் மகாதீர், அந்த பரபரப்புக்கிடையிலும் தனது வழக்கமான சைக்கிள் ஓட்டப் பயிற்சியை மறக்கவில்லை.

எப்போதுமே, உணவுக் கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியையும் வலியுறுத்தி வரும் மகாதீர், கடந்த சனிக்கிழமை (மார்ச் 7) காலையில் புத்ரா ஜெயா பூங்காவில் தனது நண்பர்கள் குழாமுடன் சைக்கிள் ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டார்.

“திடகாத்திரமான உடலும், நீண்ட காலத்திற்கு தாங்கக் கூடிய திண்மையையும் பெற்றிருப்பது நாம் செய்யப் போகும் நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியமாகும்” என தனது முகநூல் பதிவிட்டிருக்கும் மகாதீர், தான் சைக்கிள் ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

நீல நிற ஜீன்ஸ், சிவப்பு நிற டி-சட்டை, சைக்கிள் ஓட்டப் பயிற்சிக்குப் பாதுகாப்பாக தலைக் கவசம் ஆகியவற்றோடு தனது சைக்கிள் ஓட்டப் பயிற்சியைக் குழுவாக மகாதீர் மேற்கொண்டார்.