Home One Line P1 எம்ஏசிசி புதியத் தலைவராக அசாம் பாகி நியமனம்!

எம்ஏசிசி புதியத் தலைவராக அசாம் பாகி நியமனம்!

564
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) புதியத்  தலைவராக முன்னாள் துணைத் தலைவர் அசாம் பாகி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் இன்று திங்கட்கிழமை (மார்ச் 9) முதல் அமலுக்கு வருகிறது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, எம்ஏசிசி தலைவர் பதவியிலிருந்து லத்தீபா கோயா விலகினார். லத்தீபா தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மொகிதின் யாசினுக்கு கடந்த மார்ச் 2-ஆம் தேதி சமர்ப்பித்ததாக தெரிவித்திருந்தார்.

அது தனது சொந்த முடிவு என்றும் தாம் பதவி விலக அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பது வெறும் ஊகம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.