Home அரசியல் பாடாங் செராய் தொகுதியில் தே.மு சார்பாகப் போட்டியிட கோபால கிருஷ்ணன் விருப்பம்

பாடாங் செராய் தொகுதியில் தே.மு சார்பாகப் போட்டியிட கோபால கிருஷ்ணன் விருப்பம்

632
0
SHARE
Ad

gobalakrishnanபாடாங் செராய், ஏப்ரல் 10 – எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில், பாடாங் செராய் தொகுதியில் தேசிய முன்னணி சார்பாக போட்டியிட விரும்புவதாக என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் பிகேஆர் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், அக்கட்சியிலிருந்து விலகி தன்னை சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக கோபாலகிருஷ்ணன் அறிவித்துக்கொண்டார்.

தற்போது பெர்க்கேமாஸ் என்ற அமைப்பின் தலைவராக இருந்து வரும் கோபாலகிருஷ்ணன் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

#TamilSchoolmychoice

“கடந்த மூன்று ஆண்டுகளாக பாடாங் செராய் தொகுதி மக்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறேன். பாடாங் செராய் தொகுதியில், எதிர்கட்சிக்கு ஆதரவாக இருந்த பல வாக்காளர்கள் தற்போது தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளனர்.

நான் பிகேஆர் கட்சியை விட்டு விலகிய பின்னர், இப்பகுதி மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். எனவே தற்போது தேசிய முன்னணியின் சார்பாக நான் போட்டியிடும் பட்சத்தில், நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், பாடாங் செராய் தொகுதியில் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் போட்டியிடுவார் என்று அன்வார் அறிவித்திருக்கும் நிலையில், கோபாலகிருஷ்ணனின் வேண்டுகோளை தேசிய முன்னணி ஏற்றுகொள்ளுமா என்று தெரியவில்லை.