Home உலகம் தமிழ் திரைப்படங்களை கண்டித்து இலங்கையில் போராட்டம்

தமிழ் திரைப்படங்களை கண்டித்து இலங்கையில் போராட்டம்

530
0
SHARE
Ad

sri-langkaகொழும்பு, ஏப்ரல் 10- இலங்கையில் தமிழ் திரைப்படங்களுக்கு தடை விதிக்கக்கோரி புத்த மத அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்து  சென்னையில் திரைப்படத்துறையினர் கடந்த வாரம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதன் எதிரொலியாக  இலங்கையில் புத்த மத அமைப்பான, “ராவண பாலயா’ நேற்று, திரைப்பட தணிக்கை துறை அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.

#TamilSchoolmychoice

பிரபல நடிகர்கள் நடித்த தமிழ் படங்களை திரையிடக்கூடாது என அவர்கள் வலியுறுத்தினர். இது குறித்து திரைப்பட தணிக்கை துறை தலைவர் காமினி சுமனசேகரா குறிப்பிடுகையில், “தமிழ் படங்களை தடை செய்ய எங்களுக்கு உரிமை கிடையாது. இலங்கை அரசு அல்லது தேசிய திரைப்பட கார்ப்பரேஷன் தான் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க முடியும்,” என்றார்.