Home One Line P2 பிரெஞ்சு கலாச்சார அமைச்சர் பிராங்க் ரைஸ்டர் கொரொனாவைரஸால் பாதிப்பு!

பிரெஞ்சு கலாச்சார அமைச்சர் பிராங்க் ரைஸ்டர் கொரொனாவைரஸால் பாதிப்பு!

918
0
SHARE
Ad

பாரிஸ்: பிரெஞ்சு கலாச்சார அமைச்சர் பிராங்க் ரைஸ்டர் கொரொனாவைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர் வீட்டில் நல்ல நிலையில் உள்ளதாக திங்கட்கிழமை பிஎப்எம் தொலைக்காட்சி செய்திகளை அடிப்படையாகக் கொண்டு சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் தேசிய சட்டமன்றத்தில் பல விவாத அமர்வுகளில் அமைச்சர் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

பிரெஞ்சு சுகாதார அமைச்சகம் அறிவித்த புள்ளி விவரங்களின்படி, 1,412 கொரொனாவைரஸ் தொற்று வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், 25 நோயாளிகள் இந்த வைரஸால் இறந்துள்ளனர்.