Home One Line P1 அஸ்மின் அலி பெர்சாத்துவில் இணைந்து விட்டார் – மொகிதின் அறிவிப்பு

அஸ்மின் அலி பெர்சாத்துவில் இணைந்து விட்டார் – மொகிதின் அறிவிப்பு

542
0
SHARE
Ad
புத்ரா ஜெயா – பிகேஆர் கட்சியிலிருந்து விலகிய அந்தக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, பெர்சாத்து கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்து விட்டார் என பெர்சாத்து கட்சியின் தலைவர் மொகிதின் யாசின் அறிவித்திருக்கிறார்.
அஸ்மினின் உறுப்பியத்தை பெர்சாத்து உச்ச மன்றம் கடந்த கூட்டத்தில் ஏற்றுக் கொண்டது எனவும் மொகிதின் மேலும் தெரிவித்தார்.
அஸ்மினுடன் இணைந்து பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறிய மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெர்சாத்து கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர் என்று தெரிவித்த மொகிதின், அஸ்மின் அணியின் ஒரே இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான எட்மண்ட் சந்தாரா பெர்சாத்து கட்சியின் இணை உறுப்பினராக (அசோசியேட்) சேர்த்துக் கொள்ளப்படுவார் எனவும் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை நடைபெற்ற மொகிதின் யாசினின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது மொகிதின் இந்த விவரங்களை வெளியிட்டார்.