Home One Line P2 டோம் ஹாங்க்ஸ், ரீட்டா வில்சன் கொவிட்-19 தொற்று நோய்க்கு பாதிப்பு!

டோம் ஹாங்க்ஸ், ரீட்டா வில்சன் கொவிட்-19 தொற்று நோய்க்கு பாதிப்பு!

624
0
SHARE
Ad
படம்: நன்றி டேவிட் பிஸ்சேர் -ஷட்டர்சோக்

ஹாலிவுட்: டோம் ஹாங்க்ஸ் மற்றும் ரீட்டா வில்சன் ஆகியோர் கொவிட் -19 (கொரொனாவைரஸ்) தொற்று நோய்க்கு ஆளாகி இருப்பதாக டோம் தமது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

63 வயதான ஹாங்க்ஸ் மற்றும் வில்சன் இருவரும் புதன்கிழமை இந்த அறிக்கையுடன் கூடிய செய்தியை வெளியிட்டனர்.

இத்தம்பதியினர் ஆஸ்திரேலியாவில் பாஸ் லுஹ்ர்மனின் பெயரிடப்படாத எல்விஸ் பிரெஸ்லி திரைப்படத்தை தயாரிப்பதற்காக இருந்தனர். இதில் ஹாங்க்ஸ், பிரெஸ்லியின் மேலாளர் கர்னல் டோம் பார்க்கர் வேடத்தில் நடிக்கிறார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, உலக சுகாதார நிறுவனம் கொவிட்-19 வைரஸை ஒரு தொற்று நோயாக அறிவித்து உலக நாடுகள் கூடுதல் எச்சரிக்கையுடனும், தகுந்த நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறித்துயிருந்தது.