Home One Line P2 கொவிட்-19: இந்தியாவுக்கான அனைத்து விசாக்களையும் அந்நாட்டு அரசாங்கம் இடைநிறுத்தம் செய்தது!

கொவிட்-19: இந்தியாவுக்கான அனைத்து விசாக்களையும் அந்நாட்டு அரசாங்கம் இடைநிறுத்தம் செய்தது!

620
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் கொரொனாவைரஸ் வழக்குகள் தீவிரமாக அதிகரித்ததால், இந்தியாவுக்கான அனைத்து விசாக்களையும் அந்நாட்டு அரசாங்கம் இடைநிறுத்தம் செய்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் கொவிட்-19 நோய் தொற்றை தொற்று நோயாக அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் 67 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் குழு ஆவர்.

அரசு விவகாரம், அதிகாரப்பூர்வ, ஐநா அல்லது அனைத்துலக நிறுவனங்கள், வேலைவாய்ப்பு மற்றும் திட்ட விசாக்கள் தவிர, தற்போதுள்ள அனைத்து விசாக்களும் ஏப்ரல் 15 வரை இடைநிறுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“இது மார்ச் 13-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்” என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலைமையிலான அமைச்சர்கள் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.