கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தாராளவாத அரசியல் தத்துவத்தை சுமந்ததால் அவருக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
தாராளவாதம் தங்கள் பதவிகளை பறித்துவிடும் என்ற அச்சம் மலாய்க்காரர்கள் மத்தியில் இருப்பதால், அதற்கு அஞ்சி அதனை ஏற்க தயாராக இல்லை என்று அவர் கூறினார்.
“மலாய்க்காரர்களுக்கு அரசியல் மட்டுமே சக்தியாக உள்ளது”. என்று அவர் கூறினார்.
“தெங்கு ரசாலி ஹம்சா அம்னோவை விட்டு வெளியேறி செமாங்காட் 46 மலாய் கட்சியைத் தொடங்கினார். அன்வார் வெளியே சென்று ஒரு தாராளவாத கட்சியைத் தொடங்கினார். அவர் ஜசெகவின் ஆதரவை விரும்பினார், எனவே அவர் ஜசெக, பாஸ் கட்சியையும் அழைத்தார். அவரது தத்துவம் தாராளமயமானது, ”என்று அவர் கூறினார்.
“அன்வாருடன் எனக்கு பிரச்சனை இருந்தது. நான் ஒப்புக்கொள்கிறேன். நான் அம்னோ தலைவராக இருந்தபோது, அன்வார் வெளியேற்றப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.”
“நஜிப் மற்றும் அன்வார் இடையே ஒப்பிட்டால் , நஜிப் மிகவும் ஆபத்தானது என்று நான் நினைக்கிறேன்.”
“எனவே நான் ஜசெகவுடன் பணிபுரிந்துள்ளேன், ஆகவே, அன்வாரை மீண்டும் பணி செய்ய இயலும் நபராக குறிப்பிடலாம். இல்லையெனில் நாங்கள் தேசிய முன்னணியை 14- வது பொதுத் தேர்தலில் தோற்கடித்திருக்க முடியாது, ”என்று அவர் கூறினார்.