Home One Line P1 பிகேஆர்: பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து விலகல்- தேசிய கூட்டணிக்கு ஆதரவு!

பிகேஆர்: பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து விலகல்- தேசிய கூட்டணிக்கு ஆதரவு!

924
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ராஷிட் ஹஸ்னோன், பிகேஆரை விட்டு விலகியுள்ளதாகவும், பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பத்து பஹாட் மக்கள் அரசியல் முரண்பாடுகளுக்கு பலியாகி வருவதை அவர் விரும்பாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக எனது பங்கு முக்கியமானது, குறிப்பாக பத்து பஹாட் வளர்ச்சி தொடரும் என்பதை உறுதிப்படுத்த இந்த முடிவு”

#TamilSchoolmychoice

“அதனுடன், ஆளும் அரசாங்கத்துடன் இருக்க நான் முடிவெடுத்தேன்,” என்று ராஷிட் இன்று வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

இன்று முன்னதாக, பிகேஆர் தலைமை அமைப்பு செயலாளர் நிக் நஸ்மி நிக் அகமட் ஒரு பட்டியலை வெளியிட்டார்.

அதில் 27 பிகேஆர் உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் அல்லது அரசாங்க மாற்றத்திற்கு வழிவகுத்த சமீபத்திய அரசியல் பிரச்சனைகளைத் தொடர்ந்து வெளியேறினர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதில் ராஷிட்டின் பெயரும் இடம்பெற்றுள்ளது.