Home One Line P1 கொவிட்-19: வெள்ளிக்கிழமை வரை 39 புதிய வழக்குகள் பதிவு- பாதிப்பு எண்ணிக்கை 197-ஆக உயர்வு!

கொவிட்-19: வெள்ளிக்கிழமை வரை 39 புதிய வழக்குகள் பதிவு- பாதிப்பு எண்ணிக்கை 197-ஆக உயர்வு!

561
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று வெள்ளிக்கிழமை மதியம் நிலவரப்படி நாட்டில் முப்பத்தொன்பது புதிய கொவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இது ஒட்டுமொத்த வழக்குகளை 197- ஆகக் கொண்டுவந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டத்துக் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

38 நோயாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்றும், மீதம் இருப்போர் நெருங்கிய தொடர்பு மூலம் கொரொனாவைரஸ் பாதிப்புக்கு ஆளாகினர் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நான்கு நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

“முதல் அலையில் உள்ள அனைத்து வழக்குகளும் மீண்டு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.