கோலாலம்பூர்: முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங்கின் மகன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டை காவல்துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் மறுத்துள்ளார்.
ஜசெக பொதுச்செயலாளரின் மகனுக்கு சிங்கப்பூர் குடியரசு அதிகாரிகளுடன் பிரச்சனைகள் ஏற்பட்டதாக வெளியாகும் ஊகங்கள் குறித்து மலேசியாகினியிடம் அவர் “அது உண்மையல்ல” என்று அவர் சுருக்கமாக பதிலளித்தார்.
பெயர் குறிப்பிட மறுத்த லிம் குடும்ப உறுப்பினரும் இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.
முன்னதாக, சீன மொழி செய்தித்தாள் நன்யாங் சியாங் பாவ், “நம்பிகைக் கூட்டணியின் மூத்த தலைவரின் மகன் சிங்கப்பூருக்கு 2 மில்லியன் ரிங்கிட்டைக் கொண்டுவர முயன்ற பின்னர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது.
சர்ச்சைக்குரிய வலைப்பதிவு, மலேசியா டுடே, அந்த இளைஞன் லிமின் மகன் என்று நன்யாங் செய்தியை மேற்கோளிட்டு குறிப்பிட்டிருந்தது.