Home 13வது பொதுத் தேர்தல் சுங்கை ஆச்சே சட்டமன்ற தொகுதியில் பத்ருல் ஹிஷாம் போட்டி – பிகேஆர் அறிவிப்பு

சுங்கை ஆச்சே சட்டமன்ற தொகுதியில் பத்ருல் ஹிஷாம் போட்டி – பிகேஆர் அறிவிப்பு

759
0
SHARE
Ad

bard_thumb[5]பினாங்கு, ஏப்ரல் 10 – எதிர்வரும் பொதுத்தேர்தலில், பினாங்கு மாநிலம் சுங்கை ஆச்சே சட்டமன்ற தொகுதியில், பிகேஆர் சார்பாக பத்ருல் ஹிஷாம் ஷாஹாரின் (படம்) போட்டியிடுவார் என்று பினாங்கு மாநில பிகேஆர் தலைவர் மன்சூர் ஒத்மான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மன்சூர் கூறுகையில், பினாங்கு மாநில பாஸ் மற்றும் பிகேஆர் கட்சிகள் ஒற்றுமையுடன் கலந்தாலோசித்து, சுங்கை ஆச்சே தொகுதியில் போட்டியிட பிகேஆர் வேட்பாளரை தேர்வு செய்ததது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

பொதுத்தேர்தலில் சுங்கை ஆச்சே  தொகுதியில், பத்ருல் ஹிஷாம் ஷாஹாரின் போட்டியிட்டு வெற்றி  பெறுவார் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தலில், சுங்கை ஆச்சே தொகுதியில் அம்னோ வேட்பாளரான மகமுத் ஷாஹாரியா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் அசார் அகமத்தை 250 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அதேநேரத்தில், கடந்த தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநிலம், ரெம்பாவ் நாடாளுமன்ற தொகுதியில் பிகேஆர் சார்பாகப் போட்டியிட்ட பத்ருல் ஹிஷாம் ஷாஹாரின்,அம்னோ வேட்பாளர் கைரி ஜமாலுதீன் அபு பக்கரிடம் 5,746 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.