Home One Line P2 கொவிட்-19: தடுப்பு மருந்து பரிசோதனையை அமெரிக்கா இன்று தொடங்குகிறது!

கொவிட்-19: தடுப்பு மருந்து பரிசோதனையை அமெரிக்கா இன்று தொடங்குகிறது!

460
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனைகளை அமெரிக்க அரசு இன்று திங்கள்கிழமை தொடங்க உள்ளது.

உள் ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கைசர் வாஷிங்டன் பெர்மனண்ட் சுகாதார ஆய்வு நிறுவனத்தில் உள்ள ஒருவர் பரிசோதனைக்காக தடுப்பூசியைப் பெறுவார் என்று ஏபி குறிப்பிட்டுள்ளது.

ஆரோக்கியமான 45 இளம் தன்னார்வலர்கள் மீது சோதனைகள் நடத்தப்படும். அவர்கள் வெவ்வேறு அளவுகளைப் பெறுவார்கள் என்று அறிக்கை அளித்த அமெரிக்க சுகாதார அதிகாரியை அந்த அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“உடலில் வைரஸ் இல்லாததால் அவர்களுக்கு ஊசி மூலம் தொற்று ஏற்படுவது சாத்தியமில்லை.”

“இந்த சோதனையின் முக்கிய நோக்கம், தடுப்பு மருந்து பெரிய அளவிலான சோதனைக்கு பயன்படுத்தப்படுவதற்கு முன்பு எந்த பக்க விளைவுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாகும்.”

சுகாதார அதிகாரியின் கூற்றுப்படி, தடுப்பு மருந்து சரிபார்ப்பு வழக்கமாக செயல்திறனின் அளவை தீர்மானிக்க ஒன்று முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று தெரிவித்துள்ளது.