Home One Line P1 கொவிட்-19: அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்திப்புகளை நடத்துவதால் ஆபத்தில் இருக்கிறார்கள்!- அஸ்மின் அலி

கொவிட்-19: அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்திப்புகளை நடத்துவதால் ஆபத்தில் இருக்கிறார்கள்!- அஸ்மின் அலி

524
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 நெருக்கடியில் முன்னணியில் இருந்து செயல்படும் அமைச்சர்கள் தொற்றுநோயை சமாளிப்பதற்கான வழிகளில் நேருக்கு நேர் சந்திப்புகளை நடத்துவதால் தாங்கள் ஆபத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்த அமைச்சர்கள் அதிகாரப்பூர்வ விஷயங்களைக் கையாள்வதற்கான கூட்டங்களைத் தொடருவதாகக் கூறினர். ஆனால், புதிய தேசிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதோடு இணைந்து அரசியல் கட்சி கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் இப்போதைக்கு இரத்து செய்யப்பட்டுள்ளன என்று கூறியுள்ளனர்.

“நாம் ஒரு பெரிய அளவிலான நெருக்கடியை எதிர்கொள்கிறோம். மேலும் மக்களுக்கான நிலைமையை சமாளிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க ஆபத்தை சந்திக்க வேண்டும்.”

#TamilSchoolmychoice

“மற்ற அரசியல் கூட்டங்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் நன்றி கூட்டங்கள் ஆகியவற்றை நிறுத்த வேண்டும்.”

“நாம் நம் முன்னுரிமைகளை அமைக்க வேண்டும், அரசியல் தலைவர்கள் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.”

“நெருக்கடியின் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அமைச்சர்களுக்கு சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நாட்மா) வழி காட்டுகிறது.” என்று அனைத்துலக வணிகம், பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி கூறினார்.