புத்ராஜெயா: இங்குள்ள மெலாவதி அரண்மனையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை இன்று புதன்கிழமை சந்தித்தார்.
கடந்த மார்ச் 1-ஆம் தேதி பிரதமராக பதவியேற்றதிலிருந்து மொகிதினுடனான முதல் சந்திப்பு இது என்று அரண்மனை மேலாளர் டத்தோ அகமட் பாசில் ஷாம்சுடின் தெரிவித்தார்.
“சந்திப்பு காலை 8 மணிக்குத் தொடங்கி 45 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. ”என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அமைச்சரவைக்கு முந்தைய சந்திப்பானது, பிரதமருடன் நடப்பு விவகாரங்களைப் பற்றி விவாதிப்பதும், பரிமாறிக்கொள்வதும் மாமன்னரின் வாராந்திர நடவடிக்கைகளில் வழக்கமான ஒன்றாகும்.
“கடந்த ஆண்டு, மாமன்னர் மொத்தம் 36 அமைச்சரவைக்கு முந்தைய சந்திப்புகளில் கலந்து கொண்டார். இந்த ஆண்டு (பிப்ரவரி 12 வரை) மொத்தம் ஆறு அமைச்சரவைக்கு முந்தைய சந்திப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டார் ”என்று அவர் கூறினார்.