Home One Line P2 இந்தியன் 2: இயக்குனர் ஷங்கர் உட்பட 16 பேருக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு சம்மன்!

இந்தியன் 2: இயக்குனர் ஷங்கர் உட்பட 16 பேருக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு சம்மன்!

980
0
SHARE
Ad

சென்னை: அண்மையில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் நடந்த மரண சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இப்படத்தின் இயக்குநர் ஷங்கர் மற்றும் முன்னணி நடிகர் கமல்ஹாசன் சென்னை மத்திய புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் இந்த விபத்து தொடர்பான தங்கள் அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், மீண்டும் விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கர் மற்றும் 16 பேரை விசாரணைக்காக அழைத்து, மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

கடந்த மாதம் 19-ஆம் தேதி கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் பளுதூக்கி விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.