கோலாலம்பூர்: கடந்த திங்களன்று ஜோகூர் பாருவிலிருந்து குவாந்தானுக்கு பிளஸ்லைனர் பேருந்து மூலமாக பயணம் செய்த ஒருவருக்கு கொவிட் -19 தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
அதன்படி, குவாந்தான் சுகாதார அதிகாரிகள், அன்றிரவு (மார்ச் 16) 7.45 மணிக்கு புறப்பட்ட அப்பேருந்தில் (பதிவு எண் விடிஜே 2367) உள்ள அனைத்து பயணிகளையும் உடனே சுகாதார பரிசோதனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி அனைத்து பயணிகளும் சுகாதார அதிகாரிகளை தொடர்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்பேருந்து ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் நிலையத்திலிருந்து புறப்பட்டு பகாங்கில் உள்ள குவாந்தான் முனையத்தில் பயணிகளை இறக்கி உள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் புத்ராஜெயா பயணத் தடையை அறிவிப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக இது நடந்துள்ளது.