Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மக்கள் வீட்டிற்கு வெளியே இருந்தால் கைது செய்யப்படுவர் எனும் செய்தி உண்மையில்லை!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மக்கள் வீட்டிற்கு வெளியே இருந்தால் கைது செய்யப்படுவர் எனும் செய்தி உண்மையில்லை!

918
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எந்தவொரு உறுதியான காரணத்திற்காகவும்  வீட்டிற்கு வெளியே உள்ள மக்களை காவல் துறை  கைது செய்ய திட்டமிட்டுள்ளது  என்று கூறப்படும் செய்தியை காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட்  பாடோர்  மறுத்தார்.

“என் பதில். அதில் உண்மையில்லை ” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

காவல் துறையினரின் சமீபத்திய “செய்திக்குறிப்பு” என்று கூறப்பட்ட குறுஞ்செய்தி பரவலாகப் பகிரப்பட்டது. அதில்  மக்கள்  வீட்டிற்கு வெளியே இருந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று  குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சாலைத் தடைகளின் போது முகக்கவசம்  அணியாதவர்களுக்கு உடனடியாக 200 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்றும் அச்செய்தி கூறுகிறது.

தற்போது, அரசாங்கமும் காவல் துறையும் மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலங்களில் வீட்டிலேயே இருக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றன.

“இப்போதைக்கு, தேவை இருப்பின்  அல்லது அவசரம் எனும் பட்சத்தில்  மட்டுமே அவர்கள் வெளியே வருமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்” என்று காவல் துறை தெரிவித்துள்ளது.