Home One Line P2 கொவிட்-19: இத்தாலியில் மரண எண்ணிக்கை சீனாவைக் காட்டிலும் அதிகமானது!

கொவிட்-19: இத்தாலியில் மரண எண்ணிக்கை சீனாவைக் காட்டிலும் அதிகமானது!

823
0
SHARE
Ad

ரோம்: கொவிட்-19 பாதிப்புக் காரணமாக இத்தாலியில் நேற்று வியாழக்கிழமை 427 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் இறப்பு எண்ணிக்கை 3,405-ஆக உயர்ந்து உள்ளது.

இந்த எண்ணிக்கை வியாழக்கிழமை நிலவரப்படி சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. சீனாவில் 3,249 பேர் இறந்துள்ளனர்.

அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) கூற்றுபடி, 5,322 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் இத்தாலியில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 41,035- ஆக உயர்ந்தது.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில், டிசம்பர் முதல் கொவிட் -19 பதிப்பின் மையமாக விளங்கிய சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரம் வியாழக்கிழமை புதிய தொற்றுநோயைப் பதிவு செய்யவில்லை.

உதவிக்காக இத்தாலிக்கு சீன செஞ்சிலுவை சங்கம் தரை இறங்கி உள்ளது. இத்தாலியரின் முழு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தத் தவறியதே இந்த பாதிப்புக்குக் காரணம் என்று அது முன்னதாக விமர்சித்தது.

அவசரநிலை உத்தரவை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.