Home One Line P1 கொவிட்-19: காவல் துறை கட்டளைக்கு இணங்க மறுத்த ஆடவர் கைது!

கொவிட்-19: காவல் துறை கட்டளைக்கு இணங்க மறுத்த ஆடவர் கைது!

488
0
SHARE
Ad

சுங்கை பட்டாணி: தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட பின்னர், காவல் துறையினரின் கட்டளைக்கு இணங்க மறுத்த 30 வயது ஆடவர் நேற்று வியாழக்கிழமை சுங்கை பட்டாணியில் உள்ள ஓர் ஆலயத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து காலை 10.30 மணியளவில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், அவ்விடத்தில் ஒரு குழுவினர் கூடியிருந்ததாக கோலா முடா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“காவல்துறை அவர்களுக்கு இந்த உத்தரவை விளக்கியதுடன் அவர்களை வெளியேறும்படி கேட்டுக் கொண்டது. மற்றவர்கள் வெளியேறிச் சென்ற நிலையில், ஒரு நபர் அதிகாரிகளிடம் தகராறு செய்ய முயற்சித்ததாக புகார் கூறினர். எனவே அவரை கைது செய்ய காவல் துறையினர் முடிவு செய்தனர்.”

“ஆனால், நாங்கள் அவரை காவல் துறையை கடமையைச் செய்வதிலிருந்து தடுத்தக் காரணத்ததினால்தான் கைது செய்தொம்.” என்று அவர் கூறினார்.

வழங்கப்பட்ட உத்தரவுகளை குறைத்து மதிப்பிட பார்க்க வேண்டாம் என்றும் கண்காணிப்பு அதிகாரிகளின் கட்டளைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அட்ஜ்லி பொதுமக்களுக்கு நினைவுபடுத்தினார்.