Home One Line P1 கொவிட்-19: நோயாளிகள் தங்கள் வரலாறு, நெருங்கிய தொடர்புகள் பற்றி சரியான தகவல்களை வழங்க வேண்டும்!

கொவிட்-19: நோயாளிகள் தங்கள் வரலாறு, நெருங்கிய தொடர்புகள் பற்றி சரியான தகவல்களை வழங்க வேண்டும்!

412
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 சுகாதார பரிசோதனை மற்றும் தடமறிதல் தொடர்பாக அவர்களின் வரலாறு மற்றும் நெருங்கிய தொடர்புகள் பற்றிய தகவல்களை வழங்கும்போது பொதுமக்கள் குறிப்பாக நோயாளிகள் உண்மையான தகவல்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் தகவல்களை மறைக்க வேண்டாம் என்று சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

#TamilSchoolmychoice

தகவல்களை மறைப்பது குற்றம் என்று அவர் வலியுறுத்தினார்.

“இந்த வாரம் நோயாளிகள் தங்கள் தொடர்புகள் மற்றும் அறிகுறிகள், பயண வரலாறு மற்றும் நெருங்கிய தொடர்புத் தகவல்களை மறைத்த சில சம்பவங்கள் எங்களுக்கு இருந்தன. எடுத்துக்காட்டாக, ஸ்ரீ பெட்டாலிங் மசூதி கூட்டத்துடன் இணைக்கப்பட்டவர்களும் வெளிப்படுத்தப்படவில்லை.”

“மருத்துவ நடைமுறைகள் மற்றும் சிகிச்சைகள் முடிந்த பின்னரே இதுபோன்ற முக்கியமான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. அதற்குள், எங்கள் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகள் ஆபத்தில் இருந்தன. தகவல்களை வெளிப்படுத்தவோ மறைக்கவோ கூடாது, அது குற்றம் ” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

நேற்று நண்பகல் வரை, 110 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நாட்டில் மொத்த நேர்மறை சம்பவங்களின் எண்ணிக்கையை 900- ஆகக் கொண்டு வந்துள்ளது.