Home One Line P1 கொவிட்-19: மார்ச் 21 முதல் 31 வரை கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லைகளை...

கொவிட்-19: மார்ச் 21 முதல் 31 வரை கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லைகளை தமிழகம் மூடுகிறது!

477
0
SHARE
Ad

சென்னை: கொவிட் -19 பாதிப்பை எதிர்த்துப் போராடுவதற்கான தொடர் முயற்சிகளைத் தொடர்ந்து, தமிழக அரசு இன்று சனிக்கிழமை (மார்ச் 21) முதல் மார்ச் 31 வரை எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை அரசு தடைசெய்தது.

பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், மருத்துவ வண்டிகள் மற்றும் எரிவாயு உருளை போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் உட்பட சில போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“உண்மையில் உலக மக்களுக்கு இது நல்லது. தமிழகம் அதன் எல்லைகளில் தடுப்பு அமைக்க வேண்டும். சரக்கு வாகனங்கள் மற்றும் மரணம் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பயணிகள் செல்வது போன்ற இலகுரக வாகனங்களை அனுமதிக்கலாம்.” என்று அது குறிப்பிட்டுள்ளது.

“பொதுமக்களின் அத்தியாவசிய நடமாட்டத்திற்காக அரசு பேருந்துகளின் மட்டுப்படுத்தப்பட்ட செயல்பாடு அனுமதிக்கப்படும். இருப்பினும், இந்த வாகனங்களில் உள்ள பயணிகள் நோய் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும், வாகனங்கள் சரிபார்க்கப்படும். தேசத்தின் நல்வாழ்வுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.