ஜோர்ஜ் டவுன்: தெலுக் பஹாங்கில் நடந்த தெப்பத்திருவிழாவில் கலந்து கொண்ட இந்துக்கள், 14 நாட்கள் கிருமி வளர்ச்சி பெற்ற காலத்திற்குப் பிறகு அதன் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இன்றுடன் (நேற்று) 14 நாட்கள் கொவிட்-19 கிருமி வளர்ச்சி காலம் முடிவடைகிறது. ஆகவே, ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், பரிசோதனைகளுக்காக, மருத்துவமனைக்குச் செல்லுமாறு நான் அவர்களுக்கு அறிவுறுத்துகிறேன்.”
“இதுவரை மாநிலத்தில் கொவிட்-19 சம்பவங்கள் அனைத்தும் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடந்த நிகழ்ச்சியில் இருந்து வந்துள்ளன. மாசி மாகம் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இல்லை” என்று வேளாண்மை, விவசாயம் தொழில், ஊராட்சி வளர்ச்சி மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் நோர்லிலா அரிபின் கூறினார்.
கடந்த மார்ச் 8- ஆம் தேதி, ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் தேவியின் சிலையை ஏந்திய வருடாந்திர அணிவகுப்பில் சுமார் 30,000 இந்துக்கள் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.