கோலாலம்பூர்: திதிவாங்சாவில் உள்ள ஒரு சிகிச்சையகத்தில் கார்கள் மற்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது காணப்பட்டதாக டி ஸ்டார் தெரிவித்துள்ளது.
திதிவாங்சா பகுதி சிவப்பு மண்டலப்பகுதியாக நேற்று அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த பதட்டம் காணப்படுவதாகத் தெரிகிறது. மருத்துவ பணியாளர்களால் தாங்கள் பரிசோதிக்கப்படுவதற்காக அவர்கள் காத்திருப்பதாகத் தெரிகிறது.
ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த மக்கள் பலரும் இதில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களில் ஒரு சிலர் மதம் சார்ந்த உடையை அணிந்திருந்தனர்.
முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கொவிட் -19 திரையிடலுக்கு தானாக முன்வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது.