Home One Line P1 “வீட்டில் இருப்பது சலிப்பு தட்டுகிறது- நோய் பரவாமல் இருப்பதற்கு இதைச் செய்ய வேண்டும்!” – மகாதீர்

“வீட்டில் இருப்பது சலிப்பு தட்டுகிறது- நோய் பரவாமல் இருப்பதற்கு இதைச் செய்ய வேண்டும்!” – மகாதீர்

679
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதில் தாம் சோர்வாக இருப்பதாகக் கூறுகிறார்.

இருப்பினும், கொவிட் -19-க்கு எதிரான போராட்டத்தில் இது அவசியமான நடவடிக்கை என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நான் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கிறேன், அதனால் சலிப்பு ஏற்படுகிறது.”

“ஆனால், புத்தகங்களைப் படிப்பது, எழுதுவது, காணொளிகளைப் பார்ப்பது போன்ற விசயங்கள் அவற்றை மறக்கடிக்கும்”

“பல நாட்கள் வீட்டில் தங்குவது கடினம் என்றாலும். அது சலிப்பை ஏற்படுத்துகிறது, ஆனால் நாம் என்ன செய்ய முடியும்.”

“நாம் இதைச் செய்யாவிட்டால், நோய் பரவும், பலர் இறந்துவிடுவார்கள்” என்று டாக்டர் மகாதீர் யூடியூப்பில் வெளியிட்ட காணொளியில் தெரிவித்துள்ளார்.

டாக்டர் மகாதீர் கொவிட் -19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

அவரது பரிசோதனை எதிர்மறையான முடிவுகளைக் காட்டியிருந்தாலும், மலேசியாவின் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அவர் தொடர்ந்து தம்மை உட்படுத்தியுள்ளார்.