கோலாலம்பூர்: மார்ச் 31-ஆம் தேதி முடிவுக்கும் வரும், கொவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, நீட்டிக்கப்படுமா என்பதை ஒரு நாள் முன்னதாக தேசிய பாதுகாப்பு மன்றம் முடிவு செய்யும் என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.
“சமீபத்திய முன்னேற்றங்களின்படி நாங்கள் முடிவு எடுப்போம்.”
“முன்னேற்றங்கள் இருந்தால், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நேர்மறையான விளைவுகளைக் காட்டியுள்ளது எனலாம்.” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட முதல் நாள் தொடங்கி மக்கள் இன்னும் அக்கட்டளையை மதித்து வீட்டிலேயே இருக்காமல் வெளியில் இருப்பது தற்போதைய சூழலை மேலும் மோசமடையச் செய்யலாம் என்று கூறப்படுகிறது.