Home One Line P1 கொவிட்-19: பணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள், காவல் துறையினருக்கு அரச குடும்பத்தினர் உதவி!

கொவிட்-19: பணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள், காவல் துறையினருக்கு அரச குடும்பத்தினர் உதவி!

725
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுங்கை புலோ மருத்துவமனை மற்றும் தேசிய நெருக்கடி தயார் நிலை மற்றும் அவசர மையம் (சிபிஆர்சி) ஊழியர்களுக்கு பேரரசியார் துங்கு அசிசா தாம் சொந்தமாக சமைத்த உணவுகளை வழங்குவதில் மகிழ்ச்சிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

“இன்று (சனிக்கிழமை) நான் சுங்கை புலோ மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்காக சமைக்கிறேன். எனது நாட்டுக்கு சேவை செய்பவர்களை எல்லாம் இறைவன் ஆசீர்வதித்து பாதுகாக்கட்டும்” என்று பேரரசியார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்காண்டார், ஜோகூர் மாநிலம் முழுவதும் சாலைத் தடுப்புகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு உணவு நன்கொடைகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த உணவு நன்கொடைகளை ஜோகூர் காவல் துறைத் தலைவர் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை நேற்று ஞாயிற்றுக்கிழமை பாசிர் பெலாங்கி அரண்மனையில் பெற்றுக் கொண்டார்.