ஈப்போ: கொவிட்-19 பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு, பேராக் மாநிலத்தின் அனைத்து 59 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மாநிலம் தலா 20,000 ரிங்கிட் வழங்க உள்ளதாக மாநில முதலமைச்சர் அகமட் பைசால் அசுமு தெரிவித்தார்.
இந்நிதி நாளை புதன்கிழமை முதல் பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
அரசாங்கத்தின் பிரதிநிதிகள், எதிர்க்கட்சிகள் அல்லது சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் 1.18 மில்லியன் ரிங்கிட் சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
“இந்த விவகாரம் நிதி பிரிவால் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொருவரும் தேவைப்படும் காலங்களில் தேவைப்படும் மக்களுக்குப் பயன்படுத்த ஒரே அளவு பணத்தைப் பெற முடியும்.”
“மக்கள் பிரதிநிதிகள் தேவைப்படும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று அவர் கூறினார்.