Home One Line P2 கொவிட்-19 : தமிழகத்தில் முதல் மரணம்

கொவிட்-19 : தமிழகத்தில் முதல் மரணம்

723
0
SHARE
Ad

சென்னை – கொவிட்-19 பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரையைச் சேர்ந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை அதிகாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட்-19 தொடர்பில் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கும் முதல் மரணம் இதுவாகும் என தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் (படம்) அறிவித்திருக்கிறார்.

54 வயதான அந்த நபர் மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கொவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500-க்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

உலகம் முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாடு முடிவுகளை எடுத்து வரும் நாடுகளின் வரிசையில் நேற்று முதல் இணைந்துள்ள இந்தியாவில், சம்பந்தப்பட்ட அமைச்சுகள் இதன் தொடர்பிலான கட்டுப்பாடுகளையும், நடைமுறைகளையும் அறிவிக்கத் தொடங்கியுள்ளன. யார் யாருக்கு விதிவிலக்குகள், எந்தத் தொழில்களுக்கு விதிவிலக்குகள் என்பது போன்ற அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நள்ளிரவு தொடங்கி அடுத்த 21 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.

கொவிட்-19 போராட்டத்திற்காக மத்திய அரசாங்கம் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் மோடி அறிவித்தார்.

கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவுக்கு அடுத்த 21 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் மோடி மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.