Home One Line P1 கொவிட்-19: “முன்னணி சுகாதார ஊழியர்கள் மாமன்னருக்கும், நாட்டுக்கும் செயலாற்றும் கடமையில் உள்ளனர்!”- நூர் ஹிஷாம்

கொவிட்-19: “முன்னணி சுகாதார ஊழியர்கள் மாமன்னருக்கும், நாட்டுக்கும் செயலாற்றும் கடமையில் உள்ளனர்!”- நூர் ஹிஷாம்

472
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்றை எதிர்த்து போராடும் அனைத்து முன்னணி சுகாதார ஊழியர்களும், வலுவாக இருக்கவும், பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கண்ணுக்கு தெரியாத கொவிட்-19 நோயை எதிர்த்துப் போராடுவதற்கான பொறுப்பை அவர்கள் ஏற்றிருப்பதால், மிக முக்கியமாக நாட்டின் கடைசி எல்லை பாதுகாப்பாளர்களாக நாடு அவர்களைச் சார்ந்திருப்பதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நாம் வெற்றிபெறுகிறோமா இல்லையோ, இப்போது முன்னிலை வகித்து, மாமன்னருக்கும் நாட்டிற்கும் நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டிய கடமையில் உள்ளோம்.”

“பொதுமக்களுக்கு, அரசாங்கம் முன்னோடியில்லாத வகையில் நடமாட்டுக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்த போரில் வெற்றிபெற நாம் ஒவ்வொருவரும் உதவலாம். தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள் மற்றும் கொவிட்-19 பரிமாற்றத்தின் சங்கிலியை உடைக்க எங்களுக்கு உதவுங்கள்” என்று அவர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நோய்த்தொற்றுடைய அனைத்து நோயாளிகளையும் கண்டுபிடித்து, பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பது போன்ற அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டு வருவதுடன், தற்போதுள்ள சுகாதாரப் பாதுகாப்பு முறையையும் மேம்படுத்துவதற்கான திட்டத்தை சுகாதார அமைச்சு தொடரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.