கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து நாடு முழுவதிலும் குற்றக் குறியீடு 70 விழுக்காடு குறைந்துள்ளதாக காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமலாக்கத்தின்போது இதுவரை 370 புலனாய்வு ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 25 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, கொவிட்-19 பரிசோதனைக்கு 95 விழுக்காடு ஸ்ரீ பெட்டாலிங் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் தங்களை உட்படுத்திக் கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், 10,000 பங்கேற்பாளர்கள் இன்னும் வெளியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், காவல் துறையினர் அவர்களை கண்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் மொத்தம் 15,000 சாலைத் தடுப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 42,000 காவல் துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.