Home One Line P1 “நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்காதவர்கள் சிறையில் காலத்தைக் கழிக்கலாம்!” -காவல் துறை தலைவர்

“நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்காதவர்கள் சிறையில் காலத்தைக் கழிக்கலாம்!” -காவல் துறை தலைவர்

607
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்கத் தவறிய நபர்கள் சிறையில் காலத்தைக் கழிக்கலாம் என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் எச்சரித்துள்ளார்.

“நான் ஏற்கனவே சொன்னேன், நான் பிடிக்க ஆரம்பித்துவிட்டேன். 107 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.”

#TamilSchoolmychoice

“அவர்கள் நோய்க்கு எதிர்ப்பானவர்கள் என்று நினைப்பவர்களுக்கு, அல்லது தாங்கள் ஒரு குண்டர்களைக் போல் காட்ட விரும்புவோருக்கு கைவிலங்கிடப்பட்டால் ஆச்சரியப்பட வேண்டாம். அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பாலோர் அரசு ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். ” என்றார்.

மார்ச் 18-ஆம் தேதி காலகட்டத்தில் உத்தரவுகளை பின்பற்றத் தவறிய மொத்தம் 107 பேரை இன்றுவரை காவல் துறை கைது செய்துள்ளதாக அவர் கூறினார்.

இருப்பினும், இப்போது கீழ்ப்படிவோரின் எண்ணிக்கை 92 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக அப்துல் ஹாமிட் குறிப்பிட்டார்.