இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் திரைப்படத் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கும் நிலையில் அவர்களுக்கு உதவ திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சி (FEFSI – Film Employees Federation of South India) மூலமாக 5 மில்லியன் ரூபாய் நன்கொடையை ரஜினிகாந்த் வழங்கியுள்ளார்.
ரஜினியைத் தவிர்த்து நடிகர் சூர்யா, கார்த்தி, சிவகுமார் கூட்டாக 1 மில்லியன் ரூபாய் நன்கொடையும், சிவகார்த்திகேயன் 1 மில்லியன் ரூபாயும் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதியும் 1 மில்லியன் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியிருப்பதோடு, தன்னிடத்திலும், தனது படம் தொடர்பான பணிகளிலும் வேலை செய்வோர்களுக்கு முன்கூட்டியே சம்பளத்தை வழங்கி விட்டதாகவும் அறிவித்திருக்கிறார்.
மேலும் பல நட்சத்திர நடிகர்களும் நடிகையரும் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டிருக்கும் திரைப்படத் தொழிலாளர்களின் சிரமங்களைத் தீர்க்க உதவ முன்வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.