கோலாலம்பூர்: ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சியுடன் தொடர்புடைய 63 வயது நபர் நாட்டின் இன்று வியாழக்கிழமை இறந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது, மொத்தமாக நாட்டில் 21 பேர் இந்த நோயினால் மரணமுற்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவருக்கு நாள்பட்ட நோயின் வரலாறு இருந்ததாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மார்ச் 23-ஆம் தேதின்று கெடா அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, சிகிச்சை பெற்ற பின்னர் மார்ச் 22-ஆம் தேதி நேர்மறையான அறிகுறிகள் இருந்தது கண்டறியப்பட்டது.
“அவரது சிகிச்சையின் போது, அவரது உடல்நிலை மோசமடைந்தது, மார்ச் 26-ஆம் தேதியன்று அதிகாலை 4 மணிக்கு அவர் இறந்தார். சுகாதார அமைச்சகம் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது” என்று நூர் ஹிஷாம் கூறினார்.