Home One Line P1 கொவிட்-19: 80 சுகாதார அமைச்சுப் பணியாளர்கள் பாதிப்பு!

கொவிட்-19: 80 சுகாதார அமைச்சுப் பணியாளர்கள் பாதிப்பு!

489
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுகாதாரத் அமைச்சைச் சேர்ந்த 80 பணியாளர்களுக்கு கொவிட்-19 நோய்க்கு நேர்மறையான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார மையங்களில் கொவிட்-19 நேர்மறை சம்பவங்களுடன் நேரடி தொடர்பில் இருந்த காரணமாக இந்த நோய்த்தொற்று ஏற்படவில்லை என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இருப்பினும், அனைத்து சுகாதார மற்றும் முன் வரிசை உறுப்பினர்களும் தங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பது, கூடல் இடைவெளியை  கடைப்பிடிப்பது மற்றும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ) அணிவது நல்லது என்பதால் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் இன்று வியாழக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.