Home One Line P1 கொவிட்-19: அரண்மனையில் எழுவருக்கு பாதிப்பு- மாமன்னர் தம்பதிகள் தனிமைப்படுத்திக் கொண்டனர்!

கொவிட்-19: அரண்மனையில் எழுவருக்கு பாதிப்பு- மாமன்னர் தம்பதிகள் தனிமைப்படுத்திக் கொண்டனர்!

532
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இஸ்தானா நெகாராவில் ஏழு ஊழியர்கள் கொவிட் -19 நோய்க்கு நேர்மறையான அறிகுறிகளைக்  கண்டுள்ளனர். தற்போது அவர்கள் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இஸ்தானா நெகாரா இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு ஹாஜா அசிசா அமினா மைய்முனா ஆகியோரும் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தபட்டனர் என்றும், அதன் முடிவுகள் எதிர்மறையாக வெளிவந்துள்ளதாக அரண்மனை மேலாளர் டத்தோ அகமட் பாசில் ஷம்சுசின் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“ஆயினும்கூட, மாமன்னர் தம்பதிகள் நேற்று தொடங்கி 14 நாள் சுய தனிமைப்படுத்தலைக் கடைப்பிடிக்கின்றனர்,” என்று அவர் கூறினார்.