கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பின் எண்ணிக்கை அடுத்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார அமைச்சகம் எதிர்பார்க்கிறது. ஆனால், அவ்வாறான பாதிப்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அது தெரிவித்தது.
அமைச்சின் அவதானிப்புகள் மற்றும் ஜேபி மோர்கனின் ஆராய்ச்சி அமைப்பின் அறிக்கைகளின் அடிப்படையில், மலேசியா ஏப்ரல் நடுப்பகுதியில் 6,000-க்கும் மேற்பட்ட சம்பவங்களை பதிவு செய்யக்கூடும் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
“ஆனால் நாங்கள் பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளோம். மேலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு கட்டளையுடன், தனிமைப்படுத்தப்படுத்தி, சிகிச்சையளிப்பதற்கும் சாதகமான முடிவுகளை கண்டறிவோம் என்று நம்புகிறோம்.”
“எங்கள் நடவடிக்கைகள் சம்பவங்களின் எண்ணிக்கையை 6,000 பேரை எட்டுவதிலிருந்து குறைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.”
“இது எங்கள் குறிக்கோள்” என்று அவர் நேற்று புதன்கிழமை புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.