Home One Line P1 கொவிட்-19: நெகிரி செம்பிலானில் ரம்லான் சந்தை நடத்தப்படாது!

கொவிட்-19: நெகிரி செம்பிலானில் ரம்லான் சந்தை நடத்தப்படாது!

629
0
SHARE
Ad

சிரம்பான்: இந்த ஆண்டு நெகிரி செம்பிலானில் ரமலான் சந்தை நடத்தப்படாது என்று மாநில முதல்வர் டத்தோ அமினுடின் ஹாருன் தெரிவித்தார். மேலும், கொவிட்-19 நெருக்கடியைக் கையாள்வதில் மாநில அரசாங்கம் கூடுதலாக 13.74 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாக அவர் கூறினார்.

ஊராட்சி மன்றங்களில் பதிவுசெய்யப்பட்ட சிறு வணிகர்கள் அல்லது வணிகர்களுக்கு ஒரு நபருக்கு 300 என்ற அடிப்படையில் 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, வாடகை கார் ஓட்டுநர் சேவைகளுக்கு 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“மக்கள் அறக்கட்டளை கணக்கிற்கு 5 மில்லியன் ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீடு செய்வது, குறைந்த வருமானம் மற்றும் கொவிட்-19 தாக்கத்தினால் வருமானம் பாதிக்கப்படும் தினசரி தொழிலாளர்களுக்கு அடிப்படை உதவிக்கான உண்மையான தேவையை அடிப்படையாகக் கொண்டது.”

“மாநிலத்தில் உள்ள கொவிட்-19 நோயாளிக்கு 500,000 ரிங்கிட்டை நாங்கள் ஒதுக்குகிறோம், ஒவ்வொரு குடும்பமும் 500 ரிங்கிட் பெருகின்றன. 1 மில்லியன் ரிங்கிட்டை நெகிரி செம்பிலானில் உள்ள முன்னணி வரிசை சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒதுக்கியுள்ளோம்” என்று அவர் கூறினார்.