Home One Line P1 கொவிட்-19: இன்று 235 புதிய சம்பவங்கள் பதிவு- 23 பேர் மரணம்!

கொவிட்-19: இன்று 235 புதிய சம்பவங்கள் பதிவு- 23 பேர் மரணம்!

590
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று வியாழக்கிழமை 235 புதிய கொவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மொத்தமாக 2,031 சம்பவங்கள் நாட்டில் பதிவாகி இருப்பதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த எண்ணிக்கையில் 60 சம்பவங்கள் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்புடையது என்று அவர் தெரிவித்தார். மேலும், 175 பேருக்கு இந்த நோய் கண்டது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

நேற்றிரவு தொடங்கி நான்கு பேர் இறந்துள்ள நிலையில், இதுவரையிலும், நாட்டில் மொத்தம் 23 பேர் கொவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக மரணமுற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், 45 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

இன்று 16 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 215-ஆக உயர்ந்துள்ளது.