Home One Line P1 அமைச்சரவை உறுப்பினர்களின் 2 மாத ஊதியம் கொவிட்-19 நிதிக்காக வழங்கப்படும்!

அமைச்சரவை உறுப்பினர்களின் 2 மாத ஊதியம் கொவிட்-19 நிதிக்காக வழங்கப்படும்!

543
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுக்கான இரண்டு மாத ஊதியத்தை கொவிட்-19 நிதிக்காக வழங்கப்படும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பிரதமர் அலுவலகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடுகையில், இது நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றும், கொவிட் -19 பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசாங்கம் தயாராக இருப்பதை நிரூபிப்பதே இந்த நடவடிக்கை என்றும் கூறியது.

#TamilSchoolmychoice

கொவிட்-19 நிதி மார்ச் 11-ஆம் தேதியன்று இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான அரசாங்கம் ஏற்படுத்திய முயற்சியாகும்.

நேற்றைய நிலவரப்படி, அரசு மானியங்கள் உட்பட மொத்த நன்கொடை 8,493,103.48 ரிங்கிட் சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.