Home One Line P2 கொவிட் – 19 : இந்தியாவின் ஏழைகளுக்கும் அன்றாடத் தொழிலாளர்களுக்கும் 1,700 பில்லியன் பொருளாதார நிதித்...

கொவிட் – 19 : இந்தியாவின் ஏழைகளுக்கும் அன்றாடத் தொழிலாளர்களுக்கும் 1,700 பில்லியன் பொருளாதார நிதித் திட்டம்

822
0
SHARE
Ad

புதுடில்லி – இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த 21 நாட்களுக்கு நாடு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை செயல்படுத்த முனைந்திருக்கும் இந்தத் தருணத்தில், வறுமையில் வாடும் ஏழைகளுக்கும், அன்றாடத் தொழிலாளர்களுக்குமான நிதி உதவித் திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

அந்தத் திட்டத்தின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :

  • நிதித் திட்டத்தின் மொத்த மதிப்பு 1,700 பில்லியன் ரூபாய்கள் ஆகும். (ஒரு பில்லியன் என்பது 1000 மில்லியனாகும்)
  • இந்த நிதி உதவி குறிப்பாக அன்றாடத் தொழிலாளர்களையும், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்களையும் இலக்காகக் கொண்டிருக்கும்.
  • கொவிட்-19 பிரச்சனையாலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு நிலைமையாலும் இந்தியாவில் யாரும் பட்டினியால் வாடமாட்டார்கள் என உறுதியளித்த நிர்மலா சீதாராமன், நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் காலகட்டத்தில் உணவுப் பாதுகாப்பு, ரொக்கப் பணம் வழங்குதல் ஆகியவை உள்ளிட்ட அம்சங்களைத் தனது நிதி உதவித் திட்டம் கொண்டிருக்கும் என்றும் கூறினார்.
  • சுமார் 800 மில்லியன் ஏழைகள் இந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெறுவர்
  • ஏற்கனவே இந்த ஏழைக் குடும்பங்கள் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை பெற்று வரும் வேளையில் இனி கூடுதலாக மேலும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமையை அடுத்த மூன்று மாதங்களுக்குப் பெறுவர்
  • அடுத்த மூன்று மாதங்களுக்கு சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தலா 5 மில்லியன் ரூபாய் காப்புறுதி வழங்கப்படும்.