Home One Line P1 கொவிட்-19: ஜோகூரில் 2 பகுதிகள் முழுத் தடை கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன!

கொவிட்-19: ஜோகூரில் 2 பகுதிகள் முழுத் தடை கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன!

569
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பில், சிம்பாங் ரெங்காம் மற்றும் குலுவாங்கில், கம்போங் டத்தோ இப்ராகிம் மாஜிட் மற்றும் பண்டார் பாரு டத்தோ இப்ராகிம் மாஜிட் அனைத்து விதமான போக்குவரத்துகளுக்கும் மூடப்பட்டன.

இந்த இரு பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான நேர்மறை சம்பவங்கள் பதிவான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த உத்தரவு மார்ச் 27 நள்ளிரவு முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும்.
இந்நடவடிக்கையானது கொவிட்-19 நோய்த்தொற்று அப்பகுதியிலிருந்து பரவாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கட்டுப்பாட்டு நடைமுறையால், இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிப்பகுதியிலிருந்து வருபவர்கள் வெளியேற, உள்நுழைய அனுமதியில்லை.

மேலும், அனைத்து வணிக நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் அடிப்படை உணவுகளை மலேசிய நலத்துறை (ஜேகேஎம்) தயார் செய்துத் தரும். இப்பகுதியில் உள்ள மருத்துவ மையங்கள் திறக்கப்படுவதோடு, இப்பகுதிக்கான அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன.