Home One Line P1 கொவிட்-19: ஏப்ரல் 14 வரை நாடு முழுவதிலும் உள்ள எல்எச்டிஎன் அலுவலகங்கள் மூடப்படும்!

கொவிட்-19: ஏப்ரல் 14 வரை நாடு முழுவதிலும் உள்ள எல்எச்டிஎன் அலுவலகங்கள் மூடப்படும்!

597
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மார்ச் 25-ஆம் தேதியன்று வழங்கிய சிறப்புச் செய்திக்கு இணங்க, மலேசிய உள்நாட்டு வருமான வரித்துறை (எல்எச்டிஎன்எம்) நாடு முழுவதும் உள்ள அனைத்து அதன் அலுவலகங்களையும் குறிப்பிட்டக் காலம் வரை மூடுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலகட்டத்தில், எல்எச்டிஎன் அதிகாரிகள் கொவிட்-19 பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வீட்டிலிருந்து தங்கள் கடமைகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதே நேரத்தில், வரி விவகாரங்கள் உடனடியாக பரிசீலிக்கப்படுவதை எல்எச்டிஎன் உறுதி செய்யும்.

#TamilSchoolmychoice

வரி சிக்கல்கள் மற்றும் தொடர்புடைய விஷயங்கள் குறித்த எந்தவொரு கேள்விகளையும் கீழ்காணும் இணைப்புகளின் வழிப் பெறலாம்:

அ) ‘ஹாசில்’ (HASiL) இணைய அரட்டை;

ஆ) https://reviewsubscribe.hasil.gov.my/MaklumSubscribe/ms-my/; மற்றும்

இ) அதிகாரப்பூர்வ எல்எச்டிஎன் சமூகப் பக்கங்கள்:

· முகநூல் – https://www.facebook.com/LHDNM

· டுவிட்டர் – https://twitter.com/LHDNMofficial

www.hasil.gov.my என்ற அதிகாரப்பூர்வ எல்எச்டிஎன் வலைப்பக்கத்திலும் போதுமான வரி விஷயங்களைப் பற்றி மேலும் அறியலாம்.