Home One Line P1 கொவிட்-19: நாட்டில் 24-வது மரணம் பதிவானது!

கொவிட்-19: நாட்டில் 24-வது மரணம் பதிவானது!

637
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பின் காரணமாக நாட்டில் மேலும் ஒரு மரண சம்பவம் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இதன் மூலமாக நாட்டில் இந்த நோய்க் காரணமாக மரணமுற்றோரின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

மரணமுற்ற நபர் 35 வயது மலேசியராவார். கடந்த மார்ச் மாதம் இவர் இந்தோனிசியாவுக்கு சென்ற பயண வரலாறு பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 18-ஆம் தேதி கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பதாக ஐந்து நாட்களாக அவர் கொவிட்-19 நோய் அறிகுறிகளைக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். மார்ச் 20-ஆம் தேதி அவருக்கு இந்நோய் கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

நேற்றிரவு வியாழக்கிழமை 9:30 மணிக்கு அவர் காலமானதாக அவர் தெரிவித்தார்.