Home One Line P2 நடிகரும், மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!

நடிகரும், மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!

970
0
SHARE
Ad

சென்னை: நடிகரும் மருத்துவருமான சேதுராமன் நேற்று வியாழக்கிழமை மாரடைப்புக் காரணமாகக் காலமானார். இவருக்கு வயது 35.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தில் நடிகர் சந்தானம் உடன் இணைந்து நடித்திருப்பார். சேதுராமன் ஒரு முழுநேர தோல் மருத்துவர் மற்றும் அழகுசாதன நிபுணர் ஆவார். இவர் சென்னையைச் சேர்ந்த ஜி கிளினிக் என்ற தோல் சிறப்பு கிளினிக்கை நடத்தி வருகிறார்.

சந்தானம், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், விசாகா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் அறிமுகமாகி, வாலிபா ராஜா, சக்க போடு, போடு ராஜா 50/50 போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.