Home One Line P2 கொவிட்-19: சீனா, இத்தாலியை முறியடித்து அதிகமான சம்பவங்களை அமெரிக்கா பதிவு செய்தது!

கொவிட்-19: சீனா, இத்தாலியை முறியடித்து அதிகமான சம்பவங்களை அமெரிக்கா பதிவு செய்தது!

516
0
SHARE
Ad

வாஷிங்டன்: உலகளவில் கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் நேர்மறையான சம்பவங்கள் நேற்று வியாழக்கிழமை அரை மில்லியனைத் தாண்டின.

24 மணி நேரத்திற்குள் 59,089 சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

#TamilSchoolmychoice

முதன்முறையாக, அமெரிக்கா சீனாவையும் இத்தாலியையும் முறியடித்து அதிக கொவிட்-19 நேர்மறையான சம்பவங்களை பதிவு செய்த நாடாக உருவெடுத்தது.

சம்பவங்களின் எண்ணிக்கையில் கூர்மையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 17,119 புதிய சம்பவங்கள் அமெரிக்காவில் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நேர்மறை சம்பவங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 82,404-ஆகக் கொண்டு வந்துள்ளது.

நியூயார்க், வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியா ஆகியவை நகரங்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,178-ஆக உயர்ந்துள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்களின்படி, காலை 6 மணி நிலவரப்படி (மலேசியா நேரப்படி), 81,782 சம்பவங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், இத்தாலி 80,589 சம்பவங்கலுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன