Home One Line P1 கொவிட்-19: 250 பில்லியன் பொருளாதார ஊக்கத் திட்டம் அறிவிப்பு!

கொவிட்-19: 250 பில்லியன் பொருளாதார ஊக்கத் திட்டம் அறிவிப்பு!

604
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பின் காரணமாக மக்களுக்கு உதவும் வகையில்   250 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருளாதார ஊக்கத் திட்டத்தை பிரதமர் மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

முன்னதாக அறிவிக்கப்பட்ட 20 பில்லியனை உள்ளடக்கிய இந்த திட்டத்தில், கிட்டத்தட்ட 128 பில்லியன் மக்களின் நலனைப் பாதுகாக்க இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வணிகங்களை ஆதரிக்க 100 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து குடிமக்களுக்கும் சுமையை குறைக்கும் வகையில் இந்த உடனடி உதவியை அரசாங்கம் ஏற்படுத்தி இருப்பதாக அவர் கூறினார்.